கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், பாலக்கரையில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாட்டு வண்டி விவசாயத் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது மாட்டு வண்டி தொழிலாளர்களின் கடன் சுமைகள், வாழ்வாதாரம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மாட்டுவண்டி மணல் குவாரிகள் திறக்க வேண்டும், காவல் நிலையங்களில் பிடிபட்டுள்ள அனைத்து மாட்டு வண்டிகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக அரசு மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மணல் குவாரிகளைத் திறக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.