கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மணிகண்டன் - ஸ்டெல்லா தம்பதியினர். இவர்களுக்கு எட்டாம் வகுப்பு படித்து வரும் சுவேதா என்ற 14 வயது கொண்ட பெண் பிள்ளையும், ஐந்தாம்வகுப்பு, படித்துவரும் நிவேதா, மூன்றாம் வகுப்பு படித்து வரும் சுஜாதா என மூன்று குழந்தைகள் உள்ளன.
மணிகண்டன் பெங்களூருவில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மலையனூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக தனது மனைவி ஸ்டெல்லா மற்றும் மூன்று மகள்களையும் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் மலையனூர் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றிற்கு துணி துவைப்பதற்காக ஸ்டெல்லா தனது மூன்று பெண் பிள்ளையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது துணி துவைத்துக் கொண்டிருந்த போது , எதிர்பாரதவிதமாக கடைக்குட்டி பெண் பிள்ளையான சுவேதா கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த இரண்டாவது பெண் பிள்ளையான 10 வயது நிரம்பிய நிவேதா, தனது தங்கை கிணற்றில் விழுந்து விட்டதால், அவளை காப்பற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். இவ்விருவரும் கிணற்றில் குதிப்பதை பார்த்த மூத்த பெண்ணான சுவேதாவும் தனது இரண்டு தங்கைகளையும் காப்பற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார்.
ஒரு தங்கையை காப்பாற்றுவதற்கு, இரண்டு அக்காவும் கிணற்றில் குதித்த முயற்சியானது, குழந்தைகளுக்கு நீச்சல் தெரியாமல் கிணற்றின் ஆழ் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்று வளர்த்த தாய் ஸ்டெல்லாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து மூன்று குழந்தைகளின் உடலையும் மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் போலீசார் மற்றும் திட்டக்குடி காவல்துனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெற்ற தாயின் கண்முன்னே, தங்கையை காப்பற்றுவதற்கு, நீச்சல் தெரியாமல், கிணற்றில் குதித்த பாச போராட்டதால் மூன்று குழந்தைகளும் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.