Published on 27/10/2020 | Edited on 27/10/2020
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 26வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பெட்ரோல் விலை நேற்று போலவே லிட்டர் ரூ.84.14-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.75.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனப் பொதுமக்கள் அச்சம் அடைந்திருந்த நிலையில், தற்போது இது சிறிய ஆறுதலாக உள்ளது. பெட்ரோல் டீசல், விலை கடந்த இரண்டு மாதங்களில் தற்போதுதான் தொடர்ந்து 4ஆவது வாரமாக ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.