Published on 07/09/2020 | Edited on 07/09/2020
நாடாளுமன்றமும், தமிழக சட்டமன்றமும் வருகிற 14 ந் தேதி கூடுகின்றன. இந்த கூட்டத்தொடரில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றவிருக்கின்றன. அதேசமயம், கரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி, கரோனாவில் ஊழல்கள், நீட் தேர்வு ரத்து, இந்திய-சீன எல்லையில் பதட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வரும் எம்.பி.க்களும் அதிகாரிகளும் 72 மணி நேரத்திற்கு முன்பாக கரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கரோனா நெகட்டிவ் என்கிற மருத்துவ சான்றிதழ் பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருக்கிறார். இதே நடைமுறைகளை சட்டமன்றத்திலும் கொண்டு வரலாமா என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.