Published on 22/11/2021 | Edited on 22/11/2021

நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல் இருந்துவந்துள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனைக்காகப் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.