
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது தினசரி 4 லட்சம் பேருக்கு கரோனா உறுதியான நிலையில், தற்போது நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 02.12.2021அன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், நாட்டின் 18 மாவட்டங்களில் வாராந்திர கரோனா உறுதியாகும் சதவீதம் 5 முதல் 10 ஆக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.