
தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் கரோனா தொற்று என்பது பரவி வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் இதுவரை 140-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் திங்கள் முதல் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் 9, 10 ,11 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் செயல்பட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.