Skip to main content

''வரும் நாட்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு''-சென்னை மாநகராட்சி ஆணையர்

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

 '' Corona cases is likely to increase in the coming days '' - Chennai Corporation Commissioner

 

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 17,858 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 5,445 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,12,556 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 15,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 10,21,575 ஆக அதிகரித்துள்ளது.

 

 '' Corona cases is likely to increase in the coming days '' - Chennai Corporation Commissioner

 

இந்நிலையில் அடுத்துவரும் நாட்களில் மேலும் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''கரோனா தொற்று ஏற்பட்டுள்ள 13 சதவிகிதம் பேருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் போர்க்கால அடிப்படையில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்