Skip to main content

"விவசாயிகளை வஞ்சிக்கின்ற சட்டங்களை ரத்து செய்" -எஸ்.டி.பி.ஐ போராட்டம்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

Repeal laws -that deceive- farmers -SDPI protest

 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராடிவருகின்றனர்.

 

அந்த வகையில், நேற்று மாலை (24-09-2020) எஸ்.டி,பி,ஐ கட்சி சார்பாக மத்திய அரசு அலுவலகம் முன்பு வேளாண் மசோதா எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் வேளாண் மசோதா சட்ட நகலைக் கிழித்து போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அப்போது "மத்திய அரசே! விவசாயிகளை வஞ்சிக்கின்ற சட்டங்களை ரத்து செய்!" எனக் கோஷம் எழுப்பினர். மேலும், போராட்டத்தில் ஒரு பகுதியினர், காய்கறிகளை மாலையாகக் கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டு வேளாண் மசோதாவிற்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்