


Published on 31/03/2022 | Edited on 31/03/2022
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில், சின்மயா நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஏ. முத்தழகன் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் விறகு கட்டைகளை தரையில் போட்டும், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் போராட்டம் நடத்தினர்.