காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பிரச்சனை தான். தற்போது திருநாவுக்கரசர்– இளங்கோவன் இடையே தான் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அது தற்போது திருச்சி, , கரூர் என மாவட்டங்களிலும் அது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இந்த கோஷ்டி பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தது போன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சயத் தலைமையில் நடந்து வருகிற ஆர்பாட்டம், நிர்வாகிகள் கூட்டங்களில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்கியே தீருவோம் என்று ஒற்றுமையாக எல்லோரும் ஒரே குரலில் போஸ் கொடுத்தது கோஷ்டி பிரச்சனை முற்றுப்புள்ளி ஆகி விட்டது என சந்தோஷப்பட்டார்கள்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பிதழில் திருநாவுகரசர் ஆதரவாளர் மாவட்ட தலைவர் சின்னாமியின் பெயரை போடாமல் கூட்டம் நடத்தப்பட்டது . அதிர்ச்சியடைந்த சின்னசாமி தலைமைக்கு புகார் செய்தால் திடீர் நடவடிக்கையாக கரூர் வட்டாரத்தலைவர் ரவிசந்திரன், தந்தோணி வட்டாரத்தலைவர் மனோகரன் ஆகியோரின் பொறுப்புகள் விடுவிக்கப்பட்டு, அவர்களிடம் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று சொல்லி இதற்கு பதிலாக தீனதயாளன், சுப்ரமணி ஆகியோரை பொறுப்பளாராக நியமித்துள்ளது உள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ரபேல் விமான ஊழலை கண்டித்து ஆர்பாட்டம் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தனர். திருச்சி மாவட்டத்தில் புதிதாக திருநாவுக்கரசர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்திருந்தாலும். பழைய பொறுப்பாளர்கள் இளங்கோவனின் ஆதரவாளர் பிரமாண்டமாக பேனர் பிளக்ஸ் எல்லாம் இளங்கோவனுக்கு பெரிய வரவேற்ப்பு கொடுத்தனர். ஆர்பாட்டத்திற்கு முந்தினநாள் இரவே திருச்சிக்கு வந்தார் இளங்கோவன். திட்டமிட்டபடி திருநாவுக்கரசர் தலைமையில் கலந்து கொண்டனர். முதலில் ஆரம்பத்திலே மைக் பிடித்த பேசிய இளங்கோவன் 10 நிமிடம் பேசிவிட்டு அப்படியே இறங்கி சென்றார். அவருடன் வந்திருந்த அத்தனை ஆதரவாளர்களும் பாதியிலே விட்டுவிட்டு அப்படியே கலைந்து சென்றது அப்பட்டமாக தெரிந்தது.
ஒரு பக்கம் ராகுல் அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்று சொல்லி விட்டு கட்சிக்குள் கோஷ்டி பிரச்சனை அதிகரித்து வருவது அதிகமாகி கொண்டே வருகிறது.