Published on 09/10/2018 | Edited on 10/10/2018

நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க முற்படுவது கண்டனத்திற்குரியது. இதன் மூலம் பல உண்மைகளை மூடி மறைக்க முயற்சி நடப்பதாக பொதுமக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலகத்தின் இந்த ஏதேச்சாதிகார நடவடிக்கையை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ந.செல்லத்துரை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.