Published on 12/12/2020 | Edited on 12/12/2020

நடிகர் ரஜினிகாந்தின் 70- ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வி.சி.க தலைவைர் திருமாவளவன் நடிகர் ரஜினிகாந்துக்கு ட்விட்டர் வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், நாயகன் திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும். அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும். இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவரது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.