Skip to main content

கல்யாண கச்சேரியில் கைகலப்பு! நான்கு பேர் காயம்! 

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Conflict in marriage function

 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்க விட்டு இரு தரப்பு இளைஞர்களும் நடனமாடிக் கொண்டிருந்தனர். இப்படி நடனம் ஆடும் போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

 

முதலில் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் கற்கள், தடி, இரும்பு கம்பி, போன்றவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண் வீட்டை சேர்ந்த 4 இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருமண மண்டபம் போர்க்கோலம் பூண்டது. நிலைமை விபரீதமானதைக் கண்ட, மண்டபத்தின் உரிமையாளர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 


அவரது தகவலின்பேரில் போலீசார் அந்த மண்டபத்திற்கு விரைந்து சென்றனர். மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், இந்த மோதல் தொடர்பாக மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த இளவரசன் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்