Skip to main content

பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Condolences to Prime Minister Modi for Bangaru Adigalar
கோப்புப்படம்

 

பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று (19.10.2023) உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில் பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்ரீ பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மீகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்