சமூக வலை தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பத்திரிக்கையாளரைச் சந்தித்தார். அப்போது பெண் நிருபர் கேட்ட கேள்வி பதிலாளிக்காமல் கன்னத்தில் தட்டியுள்ளார். இது குறித்து பெண் நிருபர் ஆளுநரின் செயல் அருவருக்கத்தக்க ஒன்று என டுவிட் செய்ததை ஒட்டி , அப்பெண்ணிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் முகநூலில் நடிகர் எஸ்.வி.சேகர் பெண் நிருபரை ஒருமையில் பேசியதோடு , பெரிய ஆட்களுடன் தனிமையில் இருக்காமல், நிருபராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ வர முடியாது என ஆபாசமான வார்த்தைகளால் பதிவிட்டு இருப்பது, பெண்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒட்டு மொத்த மீடியாக்களும் கிரிமினல், பொறுக்கிகளின் பிளாக்மெயில் பேர் வழிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக பதிவிட்டதை கண்டித்து எஸ்.வி. சேகர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.