இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"அக்டோபர் இரண்டாம் நாள் நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாப்படுகிறது. இது அவருடைய 150 ஆண்டு விழாவாகும். இந்த நாளில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அவருக்கு மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்துகிறது.
மதச்சார்பின்மையை காப்பதற்காக காந்தி தன் உயிரை விட்டார். இந்துத்துவா அடிப்படை வாதிகளால் அவர் கொல்லப்பட்டார். இன்று மதச்சார்பின்மை, ஜனநாயகம்,அரசியலமைப்புச் சட்டம் என்பவை குறைத்துப் (undermine) பேசப்படுகின்றன.. மதத்தின் பெயராலும், பசுக்காவலர்கள் என்ற பெயராலும் இந்த நாட்டை பிளவுபடுத்த திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருகிறது. இது நரேந்திர மோடியால் வழிநடத்தப்படும் பாரதீய ஜனதா கட்சியால் ஆதரிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். அறிவுஜீவிகள் கொல்லப்பட்டனர். பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள், அறிவுஜீவிகள், விஞ்ஞானிகள் மிரட்டப்படுகின்றனர். பயமுறுத்தப்படும் சூழலும் நிலவுகிறது. இவை எதிர்க்கப்பட வேண்டும்.
எனவே எல்லா மட்டத்திலும் அக்டோபர் 2 ம் நாளை மதச்சார்பின்மை நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது. அந்த நாளில் கூட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென கட்சி கேட்டுக்கொள்கிறது. அந்த நிகழ்வுகளில் மற்ற மதச்சார்பற்ற தலைவர்களையும் அழைத்துப் பேசச் செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார் தோழர் சுதாகர் ரெட்டி. இதையே அனைத்து மாநில கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழுக்களுக்கும் அகில இந்திய தலைமை உத்திரவிட்டுள்ளது.