Published on 11/05/2021 | Edited on 11/05/2021

1985 ஆம் ஆண்டு 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நெல்லை சிவா. வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் வடிவேலுவின் 'கிணற்றை காணும்' என்ற நகைச்சுவை காட்சியில் நடித்து பிரபலமானவர்.
தற்பொழுது தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நெல்லை சிவா கரோனா ஊரடங்கு காரணமாக அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று இருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.