Skip to main content

கலெக்டரிடம் மனு  கொடுத்த திமுக எம்.எல் .ஏ. சக்கரபாணி!

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 


தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம் ஆகிய இரண்டு ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி சபைகளின் கூட்டத்தை தொகுதி எம்எல்ஏவும்,  மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.  

 

m


இந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லை. சாக்கடை வசதி இல்லை. கழிப்பிட வசதி இல்லை. முதியோர்களுக்கு உதவி தொகை கிடைக்க வில்லை. நூறுநாள் வேலைகளையும் கொடுப்பதில்லை.  பஸ்வசதி இல்லை இப்படி பல குறைகளையும் கோரிக்கைகளையும் எம்எல்ஏ சக்கரபாணியிடம் தொகுதி மக்கள் முறையிட்டு அதை நிறைவேற்றி கொடுக்குமாறு மனுவாகவும் கொடுத்தனர்.

        இப்படி பொதுமக்கள் கொடுத்த மனுக்களை எல்லாம் ஊராட்சி வாரியாக பிரித்து அந்தந்த பகுதிக்கு என்னன்ன குறைகளை  பொது மக்கள் சொன்னார்களோ அதை எல்லாம் தனி தனியாக  தொகுதி எம்எல்ஏவான சக்கரபாணி பிரித்து வைத்து இருந்தார்


.    இப்படி பொதுமக்கள் கொடுத்த மனுக்களை எல்லாம் தொகுதியில் உள்ள நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் சேர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினையை சந்தித்து எம்எல்ஏ சக்கரபாணி அந்த மனுக்களை எல்லாம் கொடுத்தார்.


.    அதை மாவட்ட கலெக்டரும் பொறுமையாக படித்துப் பார்த்தார்.  அப்போது உடனிருந்த எம்எல்ஏ சக்கரபாணியும் "பொதுமக்கள் கொடுக்கப்பட்ட பெரும்பாலான மனுக்களில்  குடிநீர் பற்றாக்குறையைத்தான் அதிகமாக கூறி இருக்கிறார்கள். அதை உடனே சரி செய்து கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். அதேபோல் மற்ற அடிப்படை வசதிகளையும் இந்த மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி எனது தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் குறைகளை உடனே நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.  


 அதற்கு மாவட்ட கலெக்டர் வினையும் எம்எல்ஏ சக்கரபாணி கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பொது மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கூடிய விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்கிறேன் என உறுதி கொடுத்து இருக்கிறார்.


.

சார்ந்த செய்திகள்