Skip to main content

சேலம் மாவட்டம்: பாஜக பேனரில் கலெக்டர் ரோகிணி!!!

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

சேலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு சார்பில் 'ஷ்ரம் யோகி மான்தன்' என்ற பெயரில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
 

rohini



60 வயதைக் கடந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், பதிவுபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலத்தில் நடந்தது. இத்திட்டத்தை வரவேற்று மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம்(பாஜக) சார்பில், விளம்பர பேனர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடிக்கும், தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் பாண்டித்துரைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

இதில் தாமரை சின்னம், அமித்ஷா, பொன்ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. கூடவே சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் படமும் இருந்தது. அவரது புகைப்படத்திற்கு அருகிலேயே ‘தொழிலாளர்கள் பிரச்சனை என்றால் உடனடியாக தீர்த்து வைக்கின்ற சேலம் கலெக்டர்’ என புகழாரம் சூட்டப்பட்டிருந்தது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிகாரிகள், இதை ஆட்சியரிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த பேனர் அகற்றப்பட்டது. 


 

சார்ந்த செய்திகள்