கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் குவிப்பு
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பிளஸ் 1க்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தநிலையில், ‘சேவ் பிளஸ் 1 ஸ்டூண்டன்ஸ்’ என்ற பெயரில் பல்வேறு வெப்சைட்டுகள் மற்றும் பேஸ்புக்கில் அரசுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதை தெரிந்து கொண்ட போலீசார் முன்னெச்சரிக்கையாக வ.உ.சி. மைதானத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.