!['After doing this, we will restore the AIADMK' - TTV Dinakaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/ivxyEZOkFpMA3VM_wOtH8vsaUjQGyVkj-SrSAemmCsg/1613730692/sites/default/files/inline-images/6767_8.jpg)
வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனக் களத்தில் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன.
தேர்தல் தேதியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து இந்தச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகுதான் அதிமுகவை மீட்டெடுப்போம்'' என்றார்.
அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு, ''அமமுக-பாஜக கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்றார். மேலும் ''சுதாகரனுக்கு அபராதத் தொகை செலுத்தப் பணம் இல்லை'' என்றார்.