கோவையில் இரண்டு முறை நெகட்டிவ் என வந்த பிறகு வீட்டில் இருந்து வெளியே சென்ற முதியவருக்கு மருத்துவப் பரிசோதனையில் கரோனா உறுதியானது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லி சென்று வந்த கோவை மாவட்டம் க.வடமதுரையைச் சேர்ந்த 61 வயது முதியவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதன்பிறகு, முதியவருக்கு இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து முதியவர் வெளியே சென்று நடமாடியுள்ளார். மேலும் 61 வயதான முதியவர் துடியலூர் போலீசார் 39 பேருடன் இணைந்து தன்னார்வ பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் கரோனா அறிகுறி தென்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் முதியவருடன் சேர்ந்து சேவையாற்றிய துடியலூர் காவல்துறையினர் 39 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.