Published on 13/05/2020 | Edited on 13/05/2020
கோவை மாவட்டத்தில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் சிவப்பு மண்டலமாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது சிவப்பு மண்டலத்தில் இருந்து, ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்பட்டது.
கோவை அடுத்து பச்சை மண்டலமாக மாறிவிடும் என சொல்லிக் கொண்டே இருந்தாலும், அதற்கு வாய்ப்பின்றியே போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு கடைசி நபராக சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதனால் கரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறிவிட்டது என பெருமை பொங்க சொன்னார் மாவட்ட ஆட்சியர் ராசாமணி. இனி கூடிய சீக்கிரம் கோவை பச்சை மண்டலமாக அறிவிக்கப்படவிருக்கிறது.