Skip to main content

ஐக்கிய அமீரக அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
CM stalin consulted with the Uae Minister

ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி (Abdulla bin Touq Al Marri) அரசு முறை பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு அப்துல்லா பின் தௌக் அல்மரி இன்று (25.7.2024) வருகை புரிந்தார். அப்போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்துல்லா பின் தௌக் அல்மரியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அப்துல்லா பின் தௌக் அல்மரியிடம் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சித் துறை ஆணையரும், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளருமான நா. முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர்  வே. விஷ்ணு,  ஐக்கிய அமீரக தூதரகத்தின் உயர் அலுவலர்கள், பன்னாட்டு தொழில் குழுமத்தின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக அப்துல்லா பின் தௌக் அல்மரி, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் நேற்று (24.07.2024) காலை பெசன்ட் நகரில் உள்ள ஹேல்த் வாக் (8 கிமி) நடைபயிச்சி பாதையில் நடை மற்றும் ஓட்டப்பயிற்சியினை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வாலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்