Published on 19/08/2020 | Edited on 19/08/2020

முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று (19/08/2020) உத்தரவு பிறப்பிக்கிறது.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புப்படுத்தி ஆவணப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அவதூறு ஆவணப்படம் வெளியிட்டதற்காக ரூபாய் 1.10 கோடி இழப்பீடு கேட்டு முதல்வர் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்பட 7 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா இன்று (19/08/2020) காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.