தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு துறையும், நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து, 'வாங்க ரசிக்கலாம்; ருசிக்கலாம்' என்கிற தலைப்பில், ' மதராசப் பட்டிணம் விருந்து' எனும் விழாவை இன்று தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கொண்ட துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், “வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், இயற்கை பானங்களான இளநீர், மோர் உள்ளிட்டவைகளை மக்கள் பருக வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, “ஒருவர் நோயில்லாதவரே செல்வந்தர். அதனால் நோயில்லாமல் வாழ்வதற்கு நல்ல உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். நாம் மறந்து கைவிட்ட நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை இனி அனைவரும் தினசரி எடுத்துகொண்டு நலமோடு வாழ உறுதி ஏற்போம்” என்று கூறினார்.