Published on 12/06/2020 | Edited on 12/06/2020
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படித்த 17 வயது சிறுமியை, பேருநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி (22) என்ற வாலிபர் கடந்த மாதம் 27 ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த திருமண நிகழ்வை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் தொடர்பாக விசாரணை நடத்திய பின்னர் மணப்பாறை மகளிர் போலீசார் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்ததாக சிறுமி மற்றும் வாலிபரின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பழனிசாமியை கைது செய்தனர். மேலும் சிறுமியை திருச்சி காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.