Skip to main content

ஓ.பி.எஸ்-க்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

ரக

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் உள்ள அவரின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

 

முதல்வரோடு ஓபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும் போது பன்னீர்செல்வம் கண்களிலிருந்து கண்ணீர் ததும்பிய காட்சி, காண்போரைக் கலங்கடிக்கும் விதமாக இருந்தது. முன்னதாக அவரின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு வருகை தருவதால் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்