தாவரத்தின் பயன்களை அறிந்து அழிப்பது தவறானது: பனை மாநாட்டில் செம்மை வாழ்வியல் செந்தமிழ்செல்வன் பேச்சு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் சுதேசி இயக்கம் சார்பில் 2 நாட்கள் நடக்கும் இந்திய பனை பொருளாதரா மாநாடு நேற்று துவங்கியது.
சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் சுதேசி இயக்கம் சார்பில் இந்திய பனை பொருளாதார மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு நேற்று(9ம் தேதி) தொடங்கியது. காலை 8 மணி முதல் 10 மணி வரை பனைத் தொழில்கள் செயல்விளக்கம் மற்றும் கலைநிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் நடந்த மாநாட்டு தொடக்க விழாவுக்கு கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சையத் வி.என். சக்காப் தலைமை தாங்கினார். கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுதேசி இயக்க செல்வவீரத்தமிழன் தொடக்க உரையாற்றினார். செம்மை வாழ்வியல் நடுவத்தின் தலைமை செயற்பாட்டாளர் ம.செந்தமிழன் கலந்து கொண்டு பேசுகையில் தாவரத்தால் என்ன பயன் என்று கேட்கும் மனிதர்கள். நம்மால் என்ன பயன் என்று கேட்டுகொள்ளவேண்டும்.
எல்லாவற்றையும் என்ன பயன் என்ற நோக்கோடு பார்க்ககூடாது. எந்த ஒரு தாவரத்தாலும் என்ன பயன் என்று கேள்வி எழுப்ப மனிதர்களுக்கு உரிமை இல்லை. ஏன் என்றால் தாவரங்கள் மனிதர்கள் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியுள்ளன. இந்த தாவரத்தால் என்ன பயன் என்று கேட்பதாலே பல கோடி தாவரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு விதையை உங்கள் தோட்டத்தில் ஊன்றி நீருற்றும் போது உங்கள் குழந்தையை வளர்கிறீர்கள். உங்களால் வளர்க்கப்பட்ட தாவரம் உங்களின் உறவு என்பதற்கு ஐயப்படவேண்டாம். தாவரங்களின் கழிவு காற்றுதான் மனிதர்களின் உயிர் காற்று. பூமியில் படைக்கப்பட்ட உயிர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி படைக்கப்பட்டுள்ளது. ஒரு தாவரத்தை அழிக்க கோடாளியுடன் அதன் அருகே செல்லும் போது தாவரத்தின் செல்கள் அதிர்ந்து ஒடுங்குவதையும், அதே தாவரத்தின் அருகே இனிமையான இசையை வாசித்தால் எப்படி ரசிக்கிறது என்பதை அறிஞர் சர்.சீவி ராமன் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நிருபித்துள்ளார்.
ஒரு மரத்தை ஆர தழுவி முத்தமிடுவதால் அது மகிழ்சி அடைந்து சிலிர்படைகிறது. மரங்களால் தான் மழை பெய்கிறது என்றால் அது பொய். முதன் முதலில் மழைபெய்த போது பூமியில் என்ன இருந்தது எப்படி மழை வந்தது. மரங்களுக்காக தான் மழை பெய்தது. மரங்கள் மழையை வரவழைக்கவில்லை. ஒரு இடத்தில் உயிர்கள் வாழ்ந்தால் அப்பகுதியில் உள்ள வெப்பநிலையை குளிர்விக்கவே மழைபெய்யபடுகிறது. மரங்களால் தான் மழை பெய்கிறது என்றால் அது பொய். அப்படியானால் தமிழகத்தில் உள்ள கொடைகானல், நீலகிரி, கொல்லிமலை போன்ற மலைபிரதேசங்களில் காட்டுமரங்களை அழித்து தைலமரங்களை நடவு செய்துள்ளார்கள் அங்கு மழையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. அதே போல் சீமைகருவேல மரங்கள் உள்ள பகுதியிலும் மழையின் அளவு குறைவு இதற்கு ஒரே காரணம் மரங்களுக்காக தான் மழை பெய்கிறது.
எந்த நிலத்தில் எந்த தாவரம் படைக்கபடுகிறதோ அதே இடத்தில் அதனை வாழவைத்தால் மனிதர்களும் சேர்ந்து வாழ்வார்கள். ஒவ்வொரு நிலத்திலும் என்ன தாவரம் இருக்க வேண்டும் என்று சங்க இலக்கியத்தில் தெளிவாக கூறப்படுட்டுள்ளது. இந்த தாவரத்தின் பயன்கள் என்ன என அறிந்து அழித்தால் கடுமையான வறட்சி, குடிநீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுள்ளது. முன்பெல்லாம் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட உயிரினங்கள் இயற்கையின் படைப்பாக படைக்கப்பட்டன. தற்போது பொருளாதர பேராசையின் காரனமாக மனித தொழிற்சாலைகளின் மூலமாக உருவாக்கபடுகிறது.
இதில் எந்தவிதமான சத்துக்களையும் எதிர்பாக்கமுடியாது. பனை மரத்தால் என்ன பயன் என்று கேட்பதை விட மரத்தை நேசிக்க வேண்டும். பனைமரம் ஏறும் தொழிலாளர்களின் குழந்தைகள் இன்று பொறியாளராகவும், மருத்துவராகவும் சென்றுவிட்டனர். அதனால் பனை தொழில் அழிந்துவிடாது. எந்த நேரத்திலும் நானும் எனது சமூகவும் பனைமரம் ஏற தயாரக உள்ளோம். பிறப்பும், செய்யும் தொழிலும் பெருமை சேர்ப்பது இல்லை. எவன் ஒருவன் எல்லா உயிரினங்களிடமும் அன்பு பாரட்டி நேசித்து பழகுவரே பெருமை அடைகிறார்.
இந்த பனைமாநாடு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் என்றார். இதனை தொடந்து இயற்கை சூழலும் பனை மரமும் கருத்தரங்கு, பனை தொழில் நுட்ப கருத்தரங்கு நடந்தது இரவு சொக்கப்பைனை கொளுத்தி பனை திருவிழா நடத்தப்பட்டது. மாநட்டின் தொடக்க விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், காந்தி மன்ற ஞானம், செம்மை வாழ்வியல் மைய சிவப்பிரகாசம், பண்ருட்டி பஞ்சவர்ணம் மற்றும் அண்ணாமலை பல்கலை கழக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். நாளையும்(10ம் தேதி) மாநாடு நடக்கிறது. இதில் பனை பொருள்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்காண ஏற்படுகளை சுதேசி இயக்க தலைவர் குமரிநம்பி மற்றும் பலர் செய்து வருகின்றனர்.
-காளிதாஸ்