சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (06.01.2021) திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 30 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ‘மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்தத்தையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு கடுமையாக மக்களைப் பாதிப்பதால் அவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.
தொழிலாளர்களை நிரந்தரமாக வைத்துக்கொள்ளாமல், 12 மணிநேர கூலி வேலைக்காரர்களாக வைத்து கொத்தடிமைகள் போல நடத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தொழிலாளர்களாக அவர்களை மாற்ற அரசு முயல வேண்டும்.
கரோனா காலத்தில் வேலையிழந்து தவிக்கக்கூடிய தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் ஊதியமாக அரசு கொடுக்க வேண்டும்’ உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பாக சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மரியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.