Skip to main content

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு மாதர் சங்கம் ஆறுதல்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

chithambaram

 

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சேதியூர் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பள்ளியின் ஆசிரியர் வியாழக்கிழமை  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

 

இதனையறிந்த மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில் வெள்ளியன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன், மாதர் சங்க மாவட்ட தலைவர்  மேரி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் செல்லையா, மாதர் சங்க கன்வீனர் ஜெயந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கட்சியினர் பாலசுந்தரம், புவனேஸ்வரி, சுந்தரமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.

 

பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுவான மக்களிடம் விசாரணை செய்தனர். அப்போது இந்த சம்பவம் உண்மை என்றும், இதேபோல் அதே பள்ளியில் இதுபோன்ற சம்பவம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றதாகவும், இதனை சரிக்கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் இதே பள்ளியில் அவரது மனைவி தலைமை ஆசிரியராக உள்ளதால் அங்கு நடைபெறும் சம்பவங்களை அவர் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் என்றும் பொதுமக்கள் விசாரணையில் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இறுதிவரை போராடும்  பயப்பட வேண்டாம் எனப் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்