Skip to main content

பலகோடி மோசடி செய்த நிதி நிறுவனம்? ஆவேசமடைந்த வாடிக்கையாளர்கள்! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

Chit fund fraudulent people struggle

 

நாகை, நீலா தெற்கு வீதியில் பிரபலமான நிதி நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்நிறுவனத்தில் நாகை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர். 

 

இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள், கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் மேலும் கால அவகாசம் சொல்லியபடியே காலத்தை கடத்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனம் அமைந்துள்ள நீலா தெற்கு வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையிலும் ஈடுபட்டனர். அங்கு வந்த நிதி நிறுவன உரிமையாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், மக்கள் சமாதானம் அடையவில்லை. 

 

நிறுவனத்தின் சார்பாக தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் ஏற்றுக்கொள்ளவில்லை. பணத்தை விரைந்து கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்