Skip to main content

சீன அதிபரை தமிழில் வரவேற்ற மோடி...

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர்  ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  
 

modi

 

 

இரவு உணவு விருந்து முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு சென்றார்.

இரண்டுவது நாளான இன்று சீன அதிபரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கோவளத்தில் சந்திக்க உள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் இரண்டாம் நாளான இன்று ஜின்பிங்கின் அட்டவணை வெளியாகியுள்ளது. 9:05 க்கு காலை ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டிய அதிபர் சற்று தாமதமாக கிளம்பி கோவளம் சென்றடைந்தார். மோடி அவரை வரவேற்று கோவளம் கடற்கரை ஹோட்டலில் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். வர்த்தகம், ராணுவம், எல்லை பிரச்னை உள்ளிட்டவை குறித்து மோடியும் ஜின்பிங்கும் ஆலோசிக்க வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்டு தலைவர்களும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோவளத்தில் உள்ள ஓட்டலில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. கண்ணாடி அறையில் இருவரும் தனிப்பட்ட முறையில் ஆலோசித்த நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் மோடி. அதில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோர் பங்கேற்பு.  "மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்.” என்று தமிழில் கூறினார்.

 மேலும் பேசியவர்,   “நான் தொன்மையான மொழி தமிழில் பேசுகிறேன். கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் மற்றும் சீனா வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர் ” என்று கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்