தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பால் கொள்முதல் விலை மற்றும் பாலின் விலையை ஆறு ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது.
![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/3NFchANCZNoS8flwNhHgi0Ir-U7UP35nfnI52kO7xpg/1566108263/sites/default/files/inline-images/eps_102.jpg)
இந்நிலையில் பலரும் இந்த செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், பால் விலை உயர்வு என்பது ஏழை & நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை! தரமான பால் விநியோகத்தை உறுதி பெரும் சுமை! தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? கடமை தவறிய அ.தி.மு.க அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா? என்று திமுக தலைவர் ட்விட்டரில் பால் விலை உயர்விற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பால் விலை உயர்விற்கு விளக்கமளித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமிம், “பால் போக்குவரத்துக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்தப்படியே பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன அதனால் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலுள்ள பால் விலையை காட்டிலும் தமிழகத்தில் பால் விலை மிகக்குறைவே” என்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பேட்டியளித்துள்ளார்.