திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பகிர்ந்தது தொடர்பாக 30 பேரிடம் இன்று (13.12.2019) காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றன.
பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்ததாக திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று (12.12.2019) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
'நிலவன் ஆதவன்' என்கிற போலி கணக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் பதிவேற்றம் செய்ததாக போலீஸார் வட்டார தகவல்கள் கூறுகின்றன. திருச்சியில் இதுவரை 3 போலி கணக்குகளில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்பு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜை சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக கிறிஸ்டோபரின் குழுவில் இருந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 30 பேரை வரவழைத்து திருச்சி மாநகர இன்று (13.12.2019) போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனிடையே குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த நபர்களை விசாரிக்க கோரி சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ஐ.பி. முகவரி பட்டியலை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.