குழந்தைகளின் ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் சென்னை முதலிடத்திலும், ஆபாசப்பங்களைப் பகிர்வதில் திருச்சி முதலிடத்திலும் உள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் அத்துமீறல்களை கண்டு பிடித்து, அதனை தடுக்க தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் வல்லுநர்கள் இணையதளம், வாட்ச் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை பற்றி ஆபாச படங்களை, பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்ந்து வருபவர்களை கண்டு அறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் 'நிலவன், ஆதவன்' என்ற போலி கணக்கின் மூலம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த, திருச்சியை சேர்ந்த கிரிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த கைது நடவடிக்கை ஆபாச படங்களை பகிர்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட தேவையில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.