Skip to main content

தமிழகத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கு வடமாநிலத்தில் நடந்த கொடூரம்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018



இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரு வயது பெண் குழந்தைக்கு நடத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது லோனி கள்போர் ரயில் நிலையம். இந்த பகுதியில் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தம்பதியினர் சாலையோரம் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 1 வயது குழந்தையும் உள்ளது. இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல் சாலையோரத்தில் குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். 

 

 

 

அப்போது நள்ளிரவில், குழந்தையின் தாய் திடீரென முழித்து பார்த்த போது அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள அனைத்து இடங்களில் குழந்தையை தேடி அழைந்துள்ளனர் எங்கும் கிடைக்கவில்லை.  


 

The horrific incident in the North


 

இதன்பின், விரக்தி அடைந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாரை ஏற்ற காவல்துறை உடனடியாக குழந்தையை தேடி விசாரணையை மேற்கொண்டது. சம்பவம் நடந்து 4 மணி நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சி‌சி‌டி‌வி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தூங்கிகொண்டிருந்த குழந்தையை கடத்தியவரை உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தியவர் மல்ஹரி பன்சோடே (65) என்பது தெரியவந்தது. 
 

அதன் பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனையில், குழந்தையின் தலை பயங்கரமாக அடித்து நொறுக்கபட்டு இருப்பதும், கொலை செய்வதற்கு முன்பு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

 

 

 

இதையடுத்து குற்றவாளி பன்சோடே காவல்துறை கைது செய்யப்பட்டு போக்ஸோ சட்டதில் 4,8(G), 366 (கடத்தல்), 376 (வன்கொடுமை), 302 (கொலை) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.