Published on 07/02/2019 | Edited on 07/02/2019

கடந்த சில நாட்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை 100 கிலோமீட்டர் கடந்து உடுமலை கிருஷ்ணாபுரம் அருகே முகாமிட்டது. சின்னதம்பியை யானை காட்டிற்கு அனுப்ப வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அதனை தொடர்ந்து சின்னதம்பி முகாமிட்டிருந்த புதர் அழிப்பது போன்ற பல்வேறு முயற்சிகளை வனத்துறை மேற்கொண்டது. சின்னதம்பியை கும்கியாக மாற்றலாம் என்ற பேச்சும் அடிபட்டது. நேற்று சின்னத்தம்பியை கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்ட கும்கி யானைகள் உடன் விளையாடி மகிழ்ந்தது சின்னதம்பி.
இந்நிலையில் உடுமலை கிருஷ்ணாபுரம் அருகே முகாமிட்டு இருந்த சின்னதம்பி அங்கிருந்து வெளியேறி சர்க்கரை ஆலை பகுதியில் இருந்து நகர்ந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மடத்துக்குளம் என்ற பகுதிக்கு செல்கிறது.