Skip to main content

தர்பார் படக்குழுவிற்கு சசிகலா தரப்பு எச்சரிக்கை...!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில்,  சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்ப எல்லாம் சிறை கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்...” என்று கூறுவதாக வசனம் உள்ளது.

 

Darbar-Rajinikanth-sasikala

 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கவனத்தில் கொண்டுதான் இந்த வசனம் படத்தில் வருவதாக பேசப்பட்டது. இதற்கிடையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ‘’பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது.  சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்.    இந்த கருத்து நல்ல கருத்துதான்.   பொதுமக்கள் வரவேற்கக்கூடிய கருத்துதான்" என்று கூறினார்.

இந்நிலையில் வினய்குமாரின் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் சென்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்க தர்பார் படத்தில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்து வசனம் இருந்தால் உடனே நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தர்பார் படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆதாரமின்றி அமைச்சர் ஜெயக்குமார் பேசினால் அவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்