புதுச்சேரியில் பிரதமர் நரேந்திரமோடி மருத்துவ காப்பீடு திட்டத்தை அமுல்படுத்தாத காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி போராட்டம் நடத்தினர்.
மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் இந்திராகாந்தி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சாமிநாதன்,
"பிரதமர் நரேந்திரமோடி கொண்டு வந்த இலவச மருத்துவ காப்பீடு திட்டம் ரூ. 5 லட்சம் செலவில் இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு நிறைவேற்றவில்லை. இதுவரை 500 ஏழை மக்கள் இறந்துள்ளனர்.
இதற்கு முழுக்காரணமாக விளங்கியவர் முதல்வர் நாராயணசாமி. மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல், குழந்தைத்தனமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களிடம் விளையாடிக்கொண்டு இருக்கிறார்" என்றார்.