




Published on 17/09/2022 | Edited on 17/09/2022
பெரியாரின் 144 பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் பிறந்த நாளான செப் 17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு முதல் சமூக நீதி நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சமூக நீதி நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி எடுக்கப்படும்.
தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளான இன்று சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் சமூக நீதி நாளுக்கான உறுதி மொழியையும் ஏற்க உள்ளனர்.