தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27/07/2022) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறவுள்ள 44- வது செஸ் ஒலிம்பியாட்- 2022க்கான தொடக்க விழா முன்னேற்பாடு பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலாளர் டாக்டர் கே.பி.கார்த்திகேயன் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.