Skip to main content

பாலம் திறந்த கையோடு ஆய்வில் இறங்கிய முதல்வர்

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
The Chief Minister inspection

சென்னையில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 8.85 கோடி ரூபாய் செலவில் சென்னை அண்ணா மேம்பாலம் அமைக்க புனரமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மேல்பகுதி, தூண்கள், அருகில் உள்ள பூங்கா, நடைபாதை ஆகியவை புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து பாலம் திறந்த கையோடு சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு செய்தார். தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லை மாவட்டங்களான நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் காவிரியில் நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் அழைப்புகள் மற்றும் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். காவிரி கரையோர மாவட்டங்களில் செய்யப்பட்ட வெள்ள எச்சரிக்கை முன்னேற்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.

சார்ந்த செய்திகள்