தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தடுப்பிற்காக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக். 31ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதால் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது மற்றும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், மருத்துவ செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இன்று (23.10.2021) காலை செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ''தமிழகத்தில் இதுவரை கரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் இல்லை'' எனத் தெரிவித்திருந்தார். பண்டிகை நேரங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசின் உள்துறை அவ்வப்போது அறிக்கை வாயிலாக வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.