கடலூர் மாவட்டம், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா குறித்தஆலோசனை கூட்டம் இன்று (09/12/2021) நடைபெற்றது. கூட்டத்திற்கு சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் காவல்துறை டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ், காவல் ஆய்வாளர் ஆறுமுகம், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின், வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வெங்கடேசன், நவமணி உள்ளிட்ட தீட்சிதர்கள், இந்து ஆலய பாதுகாப்புக் குழு செங்குட்டுவன், பக்தர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வரும் டிசம்பர் 19- ஆம் தேதி நடைபெறும் தேர் திருவிழாவிற்கு அனுமதி இல்லை என்றும் கோவிலுக்கு உள்ளேயே தேர் திருவிழாவை நடத்திக் கொள்ள வேண்டும். டிசம்பர் 20- ஆம் தேதி தரிசன விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என கோட்டாட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தீட்சிதர்கள், இதுகுறித்து கோவில் பொது தீட்சிதர்களிடம் கலந்துபேசி முடிவு கூறுவதாகக் கூறினர்.