Skip to main content

பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்: ஒன்றரை வயது குழந்தையுடன் கதறிய மனைவி... ராமதாஸ், ஸ்டாலின், பி.ஆர்.பாண்டியன் இரங்கல்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

 

சென்னை மயிலாப்பூரில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி மாரடைப்பால் மரணம் அடைந்தார். ராமதாஸ், ஸ்டாலின், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

chennai mylapore - traffic police

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில், ''சென்னை மயிலாப்பூரில் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து வேதனையடைந்தேன். மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அவருக்கு வீரவணக்கம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''மயிலாப்பூர் போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்த அருண்காந்தி இன்று ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார்.எனது அஞ்சலியையும், காவலரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருக்கடி சூழ்ந்த இந்த ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்குப் பணிச்சுமை, மன அழுத்தம் ஆகியவை ஏற்படாதவாறு காவல்துறை தலைவரும், தமிழக அரசும் அக்கறை காட்ட வேண்டும்!
 

http://onelink.to/nknapp


சென்னை மயிலாப்பூரில் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி மாரடைப்பால் காலமான செய்தி அறிந்து வேதனையடைந்தேன். மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அவருக்கு வீரவணக்கம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''திருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டை மண்ணின் மைந்தன் சென்னை மாநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வரும் தம்பி அருண்காந்தி கரோனா தடுப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு நேற்று (08.04.2020) பணியிடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

இவரது சேவைக்கு ஈடு இணை இல்லை. மக்களைக் காக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதின் விளைவு தன் உடலையே பலி கொடுத்து விட்டார்.தனது தாய்மாமனின் ஒரே மகளை மணமுடித்து 1-1/2 வயதே ஆன பெண் குழைந்தையோடு மனைவி பறிதவிப்பது அனைவரையும் மனமுடைய செய்கிறது. 
 

எனவே, தமிழக முதலமைச்சர் தனது நிவாரண நிதியில் இருந்து ரூ 1 கோடி உடனடியாக வழங்க வேண்டும். அவரது வாரிசுக்கு அரசு வேலை, மேலும் அவர் ஓய்வு பெறும் காலம் வரையிலான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். 
 

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துச் சலுகைகளும் இவருக்கும் கிடைக்கச் செய்திட வேண்டும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும்,அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் விவசாயிகள் சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். " எனக் கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்