கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
ஜாதி ரீதியாகவும், தனி அமைப்பு ரீதியாகவும் உள்ளவர்களுக்கு தனது கட்சியில் இடம் இல்லை என்று ரஜினி கூறியுள்ளாரே?
பதில்: அமைப்பு ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் இல்லாத ஜனநாயக அரசியலை முழுமையாக வரவேற்கிறேன். இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
நடிகர் விஷால் புதிய அமைப்பு தொடங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: தமிழகத்தில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்கு பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டு உள்ளனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். இவ்வாறு கூறினார்.