சென்னையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
முதலமைச்சர் எடப்பாடியை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடந்த 22 ஆம் தேதி புதுச்சேரி வந்தனர். சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் கடந்த 15 நாட்களாக தங்கியிருந்த அவர்கள் இன்று மதியம் சென்னையில் ஆளுநரை சந்திப்பற்காக சென்னை புறப்பட்டனர். ஏற்கனவே 7 எம்.எல்.ஏ க்கள் சென்ற நிலையில் இன்று காலை 13 எம்.எல்.ஏ க்கள் சென்னை பயணமாகினர்.
அப்போது அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது :-
"தற்போதைய முதல்வர் எடப்பாடி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். மக்களின் வெறுப்பு அதிகமானதால் தமிழகமே போர்க்களம் போல் ஆகிவிட்டது. அதனால் நல்ல, திறமையான முதல்வரை தேர்ந்தெடுப்போம். கட்சியை தினகரன் பார்த்துக் கொள்வார், ஆட்சியையும் கவனித்துக் கொள்வார். எங்கள் அணியை சேர்ந்த 9 பேர் எடப்பாடிக்கு ஆதரவு தருவதாக சொல்வது தவறு. நாங்கள் அனைவரும் தினகரன் பின்னால் ஒற்றுமையாக இருக்கிறோம்" என்றார்.
- சுந்தரபாண்டியன்