சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன். இவர் தன்னுடைய வீட்டிற்கு கழிவுநீர் குழாய் பதிக்க, கொடுங்கையூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் மணிகண்டனிடம் அனுமதி கோரியுள்ளார்.
இந்த நிலையில் பணிக்காக பொறியாளர் மணிகண்டன் ரூ.10ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகேந்திரன் உடனடியாக இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார்.
உடனடியாக புகாரை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் துணை கண்காணிப்பாளர் குமரகுருபரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை பொறியாளர் மணிகண்டனிடம் கொடுக்கும்படி நரேந்திரனிடம் கூறி அனுப்பியுள்ளனர். அதே போல நரேந்திரன் ரசாயன பொடி கலந்த பணத்தை கொடுத்தபோது கையும் களவுமாக மணிகண்டனை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்து செய்தனர். காலை 11 மணி முதல் மாலை வரை அவருடைய அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.